இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதில் கட்டடத்தின் சில பகுதிகள் இடிந்து கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீது விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதனால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள், மீண்டும் பூகம்பம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் விடிய விடிய தெருக்களில் தஞ்சமடைந்திருந்தனர்.