ஆம்ஸ்ட்ராங் கொலையில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஜெய்சங்கர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாகவும், இதனால், அவரை கட்சிப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டு்ள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள செல்வப்பெருந்தகை, இந்த புகார் ஒரு பொருட்டே அல்ல என்றும், இதற்கு பதில் அளிக்க விருப்பமில்லை என தெரிவித்தார்.