மத்திய அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல் நிறுவனம், 17 ஆண்டுகளுக்கு பிறகு நல்ல லாபத்தை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில் பிஎஸ்என்எல் நிறுவனம் 262 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாகவும், செலவினங்களை குறைத்ததால் இந்நிறுவனத்திற்கு ஆயிரத்து 800 கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளதாகவும் மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.