வங்கதேசத்தில் இருந்து ஊடுருவல்காரர்களை அனுமதித்து, மேற்கு வங்கத்தை சீர்குலைக்கும் முயற்சியில் எல்லை பாதுகாப்புப் படை ஈடுபடுவதாக அம்மாநில முதல்வர் மம்தா குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக ஊடுருவ எல்லை பாதுகாப்புப் படையினர் உதவுவதாகவும், இதன் மூலம் மாநில அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.