ஜம்முவின் எல்லைப்பகுதியில் உள்ள அக்நூரில், பாகிஸ்தான் படைகள் எந்த காரணமும் இன்றி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் எல்லை பாதுகாப்பு படை ஜவான் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. நள்ளிரவு சுமார் இரண்டரை மணி அளவில் எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் துருப்புகள் சுட்டதாகவும் பதிலுக்கு தங்கள் தரப்பில் இருந்து தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் எல்லை பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து படையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில் போர் நிறுத்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்ட பிறகு இரண்டு நாடுகளுக்கும் இடையே துருப்புகள் சுட்டுக்கொள்வது மிகவும் அபூர்வமாகவே நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.