விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக இலங்கை முன்னாள் முப்படை தளபதி உள்ளிட்ட நான்கு பேர் மீது பிரிட்டன் அரசு பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இந்த நான்கு பேரும் இனி பிரிட்டனுக்கு வர முடியாது என்றும், அவர்களுக்கு அங்கு சொத்துகள் இருந்தால் அவை முடக்கப்படும் என்று பிரிட்டன் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.