மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ட்வைன் ப்ராவோ, அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.கரிபீயன் பிரிமீயர் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ப்ராவோ, செயிண்ட் லூசியா கிங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டிங் செய்த போது காயமடைந்தார்.அத்துடன் தனது சிபிஎல் பயணம் மட்டுமின்றி அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.தனது கடைசி போட்டியில் இருந்து கண்ணீருடன் விடைபெற்ற அவருக்கு, சக வீரர்களும், ரசிகர்களும் பிரியாவிடை அளித்தனர்.விரைவில் தனது 41வது பிறந்தநாளை கொண்டாடவிருக்கும் ப்ராவோ, அதற்கு முன்பு தனது 21 ஆண்டு கால கிரிக்கெட் பயணத்தில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.