வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுல நடக்க இருக்கிற 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் தொடர்ல் இந்திய அணி விளையாட இருக்காங்க. இந்த தொடரோட முதல் இரண்டு போடியில இந்திய அணி கேப்டனான ரோஹித் சர்மா விளையாடுவது சந்தேகம்னு சொல்லப்படுது. போட்டி நடக்கும் தேதியில சொந்த காரணங்களுக்காக ரோஹித் சர்மாவுக்கு விடுப்பு தேவைப்படுதுனும் அதற்காக அவர் பிசிசிஐய அணுகி விடுப்பு கேட்டு இருக்கிறதாவும் தகவல் ஆகியிருக்கு. மேலும் பிசிசிஐ ரோஹித் சர்மாவுக்கு விடுப்பு வழங்கும்னு எதிர்பார்க்கப்படுற நிலையில முதல் 2 போட்டிகள்ல விளையாட மாட்டார்னு சொல்லப்படுது