இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றி அசத்திதுள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது.இரு அணிகளுக்கு இடையிலான ஒரு போட்டி டிரா ஆன நிலையில், தொடரில் 2க்கு 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து சிட்னியில் கடந்த 3 ஆம் தேதி துவங்கி நடைபெற்ற கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா அணி 3க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஆஸ்திரேலிய அணி, அதில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.