ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - காவஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா செல்லாததால் இந்திய அணியின் கேப்டனாக பும்ரா செயல்படுகிறார். இப்போட்டியில் விளையாட, அஸ்வின், ஜடேஜாவுக்கு வாய்ப்பளிக்கப்படாத நிலையில், அறிமுக வீரர்களாக நிதிஷ் ரெட்டி, ஹர்சித் ராணா களம்காணுகின்றனர்.