ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மீது முழு நம்பிக்கை உள்ளதாக முன்னாள் வீரர் கங்குலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், விராட் கோலி மற்றும் ரிஷப் பந்த் ஆகிய இருவரும் சிறப்பாக செயல்பட்டால், இந்தியா தொடரை நிச்சயமாக கைப்பற்றும் என நம்பிக்கை தெரிவித்தார்.