இஸ்ரேலில் பேருந்துகளில் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய நகரமான பாட் யாமில் இருவேறு இடங்களில் பேருந்து குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாகவும், நல்வாய்ப்பாக இதில் யாரும் காயமடையவில்லை என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பேருந்துகளில் வெடிகுண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. நிச்சயம் இது பயங்கரவாத தாக்குதலாக தான் இருக்கும் என போலீசார் சந்தேகித்துள்ளனர்.