தலைநகர் டெல்லி மற்றும் நொய்டாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. டெல்லி செயிண்ட் ஸ்டீபன் கல்லூரி, மயூர் விஹாரில் உள்ள ஆல்கான் ((Ahlcon)) பள்ளி, நொய்டாவில் உள்ள ஷிவ் நாடார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கிடைக்காததால், மின்னஞ்சல் அனுப்பியவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேர்வுகளை நிறுத்தும் நோக்கில் நொய்டாவில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.