நாட்டில் விமான போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையிலான அச்சுறுத்தல் புரளிகளுக்கு, விரைவில் தீர்வு காண்போம் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். வாரணாசியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வெடிகுண்டு மிரட்டல்களுக்கு பின்னணியில் ஒருவர் மட்டுமே இருக்கலாம் என சந்தேகிப்பதாக கூறினார்.