பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து, மும்பை போக்குவரத்து போலீசாரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு வந்த மெசேஜால் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடியை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட உள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மிரில் இருந்து கொலை மிரட்டல் வந்திருப்பது கண்டறியப்பட்டது.