பாலிவுட் முன்னணி நடிகை சோனாக்சி, காளியாக மிரட்டும் தெலுங்கு பட பாடல் வெளியாகி அசர வைத்துள்ளது. ’தபாங்’ மூலம் அறிமுகமான சோனாக்சி, ரஜினி உடன் ’லிங்கா’ மூலம் தமிழ் சினிமாவுல அறிமுகமானார். தொடர்ந்து இந்தியில் நடித்து வந்தாலும், கடந்த ஆண்டு ஓடிடியில வெளியான ஹீராமண்டி வெப்சீரிஸ், அவரை பேச வைத்தது. இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி உள்ளார். வெங்கட் கல்யாண் இயக்கி வரும் ’ஜடதாரா’ படத்தில் சோனாக்சி நடித்துள்ள நிலையில், ’ஜடதாரா’ படத்தின், ’தனா பிசாச்சி...’ என்ற பாடல் வெளியாகி உள்ளது. மண்டை ஓடுகளுடன் காளியாட்டம் ஆடும் சோனாக்சி, அரக்கர்களை வதம் செய்யும் ஆக்ரோஷ நடனத்தால் மிரட்டி உள்ளார். ’ஜடதாரா’ நவம்பர் 7ஆம் தேதி ரிலீசாகும் நிலையில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.