ராஜஸ்தான் - சென்னை அணிகள் மோதும் ஐபிஎல் போட்டியின் போது, பாலிவுட் நடிகை சாரா அலிகான் சிறப்பு கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த போட்டி வரும் 30 ஆம் தேதி கவுகாத்தி மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக பாலிவுட் நட்சத்திரம் சாரா அலிகானின் நடன நிகழ்ச்சி நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அம்மாநில ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். நடப்பு ஐபிஎல் தொடர் நடைபெறும் 12 மைதானங்களில் தொடக்க போட்டியின்போது கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் சிஎஸ்கே அணி விளையாடிய தொடக்க ஆட்டத்தில் இசையமைப்பாளர் அனிருத் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.