கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தின் குடிபள்ளி சாலையில் 3 இருசக்கர வாகனங்கள் மீது பொலிரோ வாகனம் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கோணங்குண்டே கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் வேலை முடிந்து 3 இருசக்கர வாகனங்களில் சென்றபோது, அவர்கள் மீது பின்னால் வந்த பொலிரோ வாகனம் மோதியது.