காங்கோவின் கிவு ஏரியில் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78-ஆக அதிகரித்துள்ளது. படகில் 278 பேர் சென்றதாக கூறப்படும் நிலையில், 40 பேர் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்றவர்களின் நிலை என்ன என்ற எந்த தகவலும் வெளியாகாத நிலையில், தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் உடலை கண்டு உறவினர்கள் கதறி அழுதனர்.