புளூகோஸ்ட் ’ விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ளது. இதன்மூலம், நிலவில் தரையிறங்கிய முதல் தனியார் விண்கலம் என்ற பெருமையை ‘புளூகோஸ்ட் ’ பெற்றுள்ளது. கடந்த ஜனவரி 15-ஆம் தேதி அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து அந்நாட்டின் பயர்பிளை ஏரோஸ்பேஸ் தனியாா் நிறுவனத்தின் விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது.