மகாராஷ்டிராவில் கர்நாடக பதிவெண் கொண்ட பேருந்து மீது கருப்பு ஸ்பிரே அடித்து தாக்குதல் நடத்தியதால், இரு மாநில எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அவ்வப்போது மராத்தி மற்றும் கன்னடா மொழி தொடர்பாக பிரச்சனைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் மராத்தி பேச தெரியாத கர்நாடக அரசு பேருந்து நடத்துநரை தாக்கிய விவகாரம், விஸ்வரூபம் எடுத்துள்ளது.