பாஜக, அதிமுகவை தனியாக தேர்தலை சந்திக்க அனுமதிக்க மாட்டார்கள் என்றும், கூட்டணி அமைத்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடி கொடுப்பார்கள் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை அடுத்த பல்லாவரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசு பள்ளி மாணவர்களுக்கு மூன்றாவது மொழி கிடைக்கவில்லை என்றால் என்ன பாதிப்பு ஏற்பட்டு விடப்போகிறது என கேள்வி எழுப்பினார்.