டெல்லியில் வாக்கு எண்ணிக்கை நாளை நடக்க உள்ள நிலையில், ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு வலை வீசியுள்ள பாஜக அவர்களுக்கு 15 கோடி ரூபாய் தருவதாக ஆசை காட்டுவதாக முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். தங்கள் பக்கம் தாவினால் ஒவ்வொருவருக்கும் இந்த தொகை தரப்படும் என ஆம் ஆத்மியை சேர்ந்த 16 வேட்பாளர்களிடம் பாஜக தரப்பில் பேரம் பேசப்பட்டதாகவும் கெஜ்ரிவால் சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார்.பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் பாஜகவுக்கு 55 க்கும் அதிகமாக இடங்கள் கிடைக்கும் என செய்தி வெளியான நிலையில், பாஜக ஆம் ஆத்மி வேட்பாளர்களை இழுக்க முயற்சிப்பது, அந்த கருத்துக் கணிப்புகள் இட்டுக் கட்டப்பட்டவை என்பதை காட்டுவதாகவும் கெஜ்ரிவால் பதிவிட்டுள்ளார்.ஆனால் ஆம் ஆத்மியில் இருந்து ஒரு வேட்பாளர் கூட பாஜகவின் ஆசைக்கு பணிய மாட்டார் எனவும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.