பிரதமர் மோடி பிறப்பால் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல என்ற தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கருத்தால் பாஜகவினர் கொந்தளித்துள்ளனர். ரேவந்த் ரெட்டி எந்த வேலையும் செய்யாததாலும், தெலுங்கானா மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாலும், இதுபோன்ற கருத்துகளை கூறி தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்க விரும்புவதாக பாஜக விமர்சித்துள்ளது.