சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாநகரட்சி மேயராக பதவியேற்ற பாஜகவின் பூஜா விதானி, பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, நாட்டின் இறையாண்மை என்பதற்கு பதிலாக வகுப்புவாதத்தை காப்பேன் என படித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 'இறையான்மை' என்பதை 'வகுப்புவாதம்' என்று தவறாக வாசித்ததை கவனித்த மாவட்ட ஆட்சியர் உடனே சுட்டிக்காட்டிய நிலையில், பூஜா விதானி மீண்டும் சரியாக வாசித்தார்.