ஒடிசா,பீகார் என, எங்கு சென்றாலும் பாஜகவினர், தமிழர்களின் மீதான வன்மத்தை தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். பீகாரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் பீகாரிகள் துன்புறுத்தப்படுவதாக சர்ச்சைக்குள்ளாகும் வகையில் பேசியதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. பிரதமரின் சர்ச்சை பேச்சு குறித்து எக்ஸ் தளத்தில் பதிலடி கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே மறந்து, தனது மாண்பை மோடி இழந்து விட்டதாக விமர்சனம் செய்துள்ளார். பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் பெருமைமிக்க இந்தியாவில், அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு நாட்டின் நலன் மீது பிரதமர் மோடியும், பாஜகவினரும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.இதையும் பாருங்கள் - பிரதமர் பேச்சு - முதலமைச்சர் கண்டனம் | CM Stalin Replies To PM Modi | MK Stalin | TN Govt