பாஜகவின் சமீபத்திய தேர்தல் வெற்றிகளின் நம்பகத்தன்மை குறித்து, மீண்டும் ஒருமுறை கடும் சந்தேகம் எழுந்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஹரியானாவில் வாக்கு திருட்டு தொடர்பாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள சான்றுகள் அதிர்ச்சி அளிப்பதாக கருத்து கூறியுள்ள அவர், வாக்குகளை திருடுவதன் மூலம், பாஜக மக்களின் தீர்ப்பை திருடுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அடுத்து வரக்கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி எனப்படும் எஸ்.ஐ.ஆர். நடைமுறை என்பது இன்னும் ஆபத்தானது என்றும், இவ்வளவு ஆதாரங்களை வெளியிட்ட போதிலும், தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்காதது ஏன்? என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.இதையும் பாருங்கள் - மக்கள் தீர்ப்பை திருடும் பாஜக - முதலமைச்சர் | DMK | CM STALIN | MODI | BJP