அரசு பங்களாவை காலி செய்யும் போது, அதில் இருந்து பொருட்களை திருடிச் சென்று விட்டதாக, பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் மீது பாஜக திருட்டு புகார் கூறியுள்ளது. பாட்னாவில் தேஜஸ்வி யாதவ் தங்கியிருந்த அரசு பங்களா தற்போது துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் விஜயதசமி அன்று அவர் குடிபெயர முடிவு செய்துள்ளார். இந்நிலையில் அரசு பங்களாவில் உள்ள ஏசி, சோபா, மின் விளக்குகளை தேஜஸ்வி தரப்பினர் திருடி சென்றுவிட்டதாக பாஜக புகார் தெரிவித்துள்ளது. ஆனால் பாஜகவின் குற்றச்சாட்டை முழுமையாக மறுத்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தள நிர்வாகிகள், பங்களாவை ஒப்படைக்கும் போது இருந்த பொருட்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினர்.