’பைசன்’ திரைப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்த இயக்குநர் வெற்றிமாறனுக்கு படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், நன்றி தெரிவித்துள்ளார். துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான பைசன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு, வசூலையும் குவித்து வருகிறது. இந்த நிலையில் படத்தை பார்த்த இயக்குநர் வெற்றிமாறன் படக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பதிவிட்டுள்ள மாரி செல்வராஜ், ”பைசனை பார்த்து கொண்டாடிய எங்கள் மரியாதைக்குரிய இயக்குனர் வெற்றிமாறன் அவர்களுக்கு எங்கள் நன்றியும் பிரியமும்” என்று பதிவிட்டுள்ளார்.