மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் நடந்த யூனியன் கார்பைடு விஷ வாயு துயரத்தின் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கிருந்து உயிருக்கு ஆபத்தான நச்சுக் கழிவுகள் 250 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் இந்தோருக்கு கொண்டு செல்லப்படுகிறது. போபாலில் கடந்த 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி இரவு யூனியன் கார்பைடு ஆலையில் இருந்து வெளியேறிய நச்சுவாயுவை சுவாசித்து 5 ஆயிரத்து 479 பேர் உயிரிழந்தனர்.