எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் வழங்கும் ஸ்டார்லிங் சாட்டிலைட் சேவையை இந்தியாவில் மேற்கொள்ள பாரதி ஏர்டெல் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த தகவலை பாரதி ஏர்டெல் நிறுவனம் பங்குசந்தையில் தெரிவித்துள்ளது. எனினும் ஸ்டார்லிங் சாட்டிலைட் சேவை, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலை பெற்ற பிறகே இந்தியாவில் வழங்கப்படும். ஸ்டார்லிங் சாட்டிலைட் இணைய கருவிகளை ஏர்டெல் தனது ஷோரூம்களில் விற்பனை செய்யும் எனவும், இந்த மிக உயர் அதி கனவேக இணையதள சேவை ஊரகப்பகுதிகள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து இடங்களிலும் அனைத்து துறைகளிலும் வழங்கப்படும் எனவும் பாரதி ஏர்டெல் தெரிவித்துள்ளது.