மகாகவி பாரதியின் கவிதைகள் துணிவைத் தூண்டியதாகவும், சிந்தனைகள் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். மகாகவி பாரதியாரின் 143வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். இந்தியாவின் கலாச்சார, தேசிய உணர்வை ஒளிரச் செய்தவர் என்றும், தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்துவதில் பாரதி ஆற்றிய பங்களிப்புகள் ஒப்பிலாதவை என்றும் தெரிவித்துள்ளார்.