பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு, பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசை வலியுறுத்தினார். முத்துராமலிங்க தேவரின் குருபூஜை, ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை மனு வழங்கி உள்ளதாக தெரிவித்தார். மருது பாண்டியர்களுக்கு மரியாதை;மதுரை, தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர்களின் சிலைகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக விமான நிலையம் வந்தடைந்த இபிஎஸ்-க்கு அதிமுகவினர் திரண்டு வந்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து, மருது பாண்டியர்களின் சிலைகளுக்கு இபிஎஸ் மரியாதை செலுத்தினார். தாரை தப்பட்டை முழங்க மயிலாட்டம், மரக்கால் ஆட்டம் ஆடிக் கொண்டு வந்த அதிமுகவினர் இபிஎஸ்-க்கு வீர வாள் மற்றும் வளரியை நினைவு பரிசாக வழங்கினர். இதையும் பாருங்கள்... இபிஎஸ் மரியாதை...மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து இபிஎஸ் மரியாதை | Edappadi Palaniswami | MaruthuPandyas NewsTamil 24X7