பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா உடன் மோதிய செக் வீராங்கனை மார்கெட்டா வாண்ட்ரசோவா, 6க்கு 2, 6க்கு 4 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.