நிதிஷ் குமாரை, என்டிஏ கூட்டணியின் முதல்வர் என உறுதியாக அறிவிப்பதில் பாஜக சுணக்கம் காட்டியதால், முதற்கட்ட தேர்தலில் அந்த கூட்டணிக்கு எதிர்பார்த்த வாக்குகள் விழவில்லை என கூறப்படுகிறது. இதனால், முதற்கட்ட தேர்தலுக்கு பின்னர் நிதிஷ் குமாரை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யப்பட்டதாக தெரிகிறது. முதற்கட்ட வாக்குப் பதிவு நடந்த 121 தொகுதிகளில் பெரும்பாலானவை ஜேடியூவுக்கு ஆதரவானவை என்றாலும், அந்த கட்சியின் வாக்குகள் இந்தியா கூட்டணிக்கு பெருவாரியாக சென்றிருக்கலாம் என பாஜக தொண்டர்கள் கட்சித் தலைமைக்கு தெரிவித்தனர். இதை அடுத்து சுதாரித்துக் கொண்ட பாஜக தலைமை, நிதிஷ் குமாரை முதல்வர் வேட்பாளராக உறுதி செய்து பிரச்சாரத்தை முடுக்கி விட்டதாக கூறப்படுகிறது.