ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைப்பது குறித்து தற்போது எந்த கருத்தும் சொல்ல முடியாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ஷேக் ஹசினாவை திருப்பி அனுப்புவது தொடர்பாக வங்கதேச இடைக்கால அரசிடம் இருந்து கோரிக்கை வந்ததை உறுதிப்படுத்தினார்.