இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹஸீனாவை கைது செய்வதற்கான ரெட் நோட்டீசை பிறப்பிக்குமாறு இடன்டர்போலுக்கு வங்கதேச சிறப்பு நீதிமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. வங்க தேசத்தில் ஷேக் ஹஸீனாவுக்கு எதிராக நடந்த மக்கள் போராட்டத்தின் போது நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதற்கு காரணமானவர் என கூறி அவரை கைது செய்ய இன்டர்போலுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. வங்கத்தை விட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி தப்பிய ஷேக் ஹஸீனாவுக்கு இந்திய அரசு அடைக்கலம் கொடுத்துள்ளது. அவரை வங்கத்திற்கு கொண்டுவந்து விசாரணை நடத்தப் போவதாக அங்கு முகம்மது யூனுஸ் தலைமையில் அமைந்துள்ள இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.