டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை வந்தடைந்த வங்கதேச கிரிக்கெட் அணியினர் பலத்த பாதுகாப்புடன் நட்சத்திர விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.இந்தியா - வங்கதேசம் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் வருகின்ற 19ஆம் தேதி தொடங்க உள்ளது.இதில் பங்கேற்பதற்காக இந்திய அணியினர் இரு நாட்களுக்கு முன்பு சென்னை வந்துள்ள நிலையில் வங்கதேச அணியினர் டாக்காவிலிருந்து விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.அனைத்து சோதனைகளையும் முடித்து வெளியே வந்த அவர்கள் தனி வாகனம் மூலம் நட்சத்திர விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.