ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்ற வாழை படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் வரும் என படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற வாழை படத்தின் 25ம் நாள் வெற்றி விழாவில், படத்தில் பணிபுரிந்த அத்தனை கலைஞர்களுக்கும் அவர் நினைவு பரிசுகளை வழங்கினார்.