பாலியல் புகார்களை விசாரித்து உண்மை இருக்கும் பட்சத்தில், குற்றம் புரிந்தவர்கள் 5 ஆண்டுகளுக்கு திரைத்துறையில் பணியாற்ற தடை விதிக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்திற்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் பரிந்துரை செய்துள்ளது. மலையாள திரைத்துறையில் பாலியல் குற்றச்சாட்டுகள் சூறாவளியை கிளப்பியுள்ள நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், கமிட்டி தலைவர் ரோகிணி, உறுப்பினர்கள் சுஹாசினி, குஷ்பூ, லலிதா குமாரி, கோவை சரளா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி, பாதிக்கப்பட்டவர்கள் கமிட்டி மூலம் புகார்களை அளிப்பது, நேரடியாக ஊடகங்களில் பேச வேண்டாம் என்பன உள்ளிட்ட 7 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.