அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னுக்கு வரவேண்டும் என்றுதான் ராமதாஸும், திருமாவளவனும் போராடி வருவதாக கூறிய அன்புமணி, பாமகவுக்கும் விசிகவுக்கும் கொள்கை ஒன்றுதான் எனவும் பேசினார். மதுரை பழங்காநத்தம் பகுதியில் பாமகவின் 36 ஆம் ஆண்டு துவக்க விழா கூட்டத்தில் பேசிய அவர், ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பாகவே தமிழகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் போராடி தீர்வு கண்டு வருவது பாமக என்றார்.