பஜாஜ் நிறுவனம் சேத்தக் ((Chetak)) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் விலை குறைவான வேரியண்ட் ஒன்றை தயார் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் சேத்தக்-இன் மற்ற வேரியண்டுகளைக் காட்டிலும் மிக மிக விலை குறைவானதாக இருக்கும் என நம்பப்படுகின்றது. இந்த மாடலின் சோதனை ஓட்ட பணிகளையே பஜாஜ் நிறுவனம் தற்போது நாட்டில் தொடங்கி இருக்கின்றது.