பஜாஜ் நிறுவனம் முற்றிலும் புதிய பல்சர் N125 பைக்கை வெளியிட்டுள்ளது. கவர்ச்சிகரமான தோற்றத்துடன் வெளியாகி உள்ள இந்த பைக்கின் விலை, 94 ஆயிரத்து 707 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 125 சிசி பிரிவில் பஜாஜ் வெளியிடும் ஐந்தாவது பைக் இதுவாகும்.