நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பான புதிய வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. தாக்குதலின் போது சுற்றுலா பயணிகள் அலறியடித்துக் கொண்டு கடைகளுக்கு பின்பு பதுங்கியிருந்த காட்சிகள் மற்றும் ஜிப்லைனில் சென்றபோது சுற்றுலா பயணி செல்போனில் பதவி செய்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.