பாகுபலி திரைப்பட இயக்குநர் ராஜமவுலி சித்ரவதை செய்ததாக புகார் கூறி, தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சீனிவாசராவ் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், தெலுங்கு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலைக்கு முன்பு சீனிவாச ராவ் செல்ஃபி வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், இயக்குநர் ராஜமவுலி மிகப்பெரிய சித்ரவதைக்கு உட்படுத்தியமாக புகார் கூறியுள்ளார்.