ஆம்ஸ்ட்ராங்க் படுகொலை வழக்கில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி சந்தேகம் எழுப்பியுள்ளது.தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் கண்ணியத்தையும், கவுரவத்தையும் காப்பாற்ற வேண்டுமென்றால் அவரை கட்சியில் இருந்து நீக்கி, கைது நடவடிக்கைக்கு வழிவிட வேண்டுமென ராகுல்காந்திக்கு பிஎஸ்பியின் மாநிலத் தலைவர் ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.