நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மேட்டுக்காடு பகுதியில் உள்ள பத்திரகாளியம்மன் கோயில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தைமாத திருவிழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனை தொடர்ந்து, பூசாரி பக்தி பரவசத்துடன் அம்மனுக்கு எருமை கிடா வெட்டி பூஜை செய்ததையடுத்து, ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.