ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பேட் கம்மின்ஸ், பெக்கி பாஸ்டன் தம்பதிக்கு 2-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. கிரிக்கெட் உலகில் ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள பேட் கம்மின்ஸ், தனது நீண்ட நாள் காதலியான பெக்கி பாஸ்டனை கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆல்பி என்ற மகன் உள்ள நிலையில், 2-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு எடித் மரியா போஸ்டன் கம்மின்ஸ் என பெயரிட்டுள்ளதாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேட் கம்மின்ஸ் அறிவித்துள்ளார். இதையடுத்து பேட் கம்மின்ஸ் - பெக்கி பாஸ்டன் தம்பதிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.