மேற்கு வங்கத்தில் பாபர் மசூதி அமைக்கப்படும் என திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ அறிவித்த நிலையில், ராமர் கோயில் ஒன்று கட்டப்படும் என பாஜக அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. முர்ஷிதாபாத் தொகுதி எம்.எல்.ஏவான ஹுமாயுன் கபீர், அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதி போன்ற அமைப்பில் ஒரு மசூதியை கட்டப்போவதாக தெரிவித்த நிலையில், பாஜக போட்டிப்போட்டுக்கொண்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.