சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'பராசக்தி' திரைப்படத்தில் நடிகை பாப்ரி கோஷ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.